RK-251 – புதிய ஸ்மார்ட் புற்றுநோய் மருந்து
பாரம்பரிய கீமோதெரபிக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள RK-251 என்ற புதிய “ஸ்மார்ட்” மருந்து புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த மருந்து புற்றுநோய் செல்களை குறிவைத்து தாக்குவதுடன், ஆரோக்கியமான செல்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Triple-Negative Breast Cancer (TNBC) செல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முன்-மருத்துவ ஆய்வுகளில் RK-251 வலுவான செயல்பாட்டைக் காட்டியுள்ளது. மேலும், ஆரோக்கியமான செல்களில் இதன் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது.
இந்த ஆராய்ச்சியில் Institute of Advanced Study in Science and Technology (IASST) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் IIT Guwahati நிபுணர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். இவர்களின் கூட்டு முயற்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பாராட்டியுள்ளது.