Type Here to Get Search Results !

தேசிய கைத்தறி தினம் (National Handloom Day)

0

 இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) கொண்டாடப்படுகிறது. இத்தினம் நமது நாட்டின் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளர்களின் சமூக-பொருளாதார பங்களிப்பைக் கௌரவிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணி

சுதேசி இயக்கம்: 

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று கொல்கத்தா டவுன் ஹாலில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் நினைவாக, இந்திய அரசு 2015 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7 ஐ தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது.

முதல் நிகழ்வு: 

இந்தியாவின் முதல் தேசிய கைத்தறி தினத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

பெண் தொழிலாளர்கள்: 

இத்துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 72 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பதால் இது பெண் அதிகாரமளித்தலுக்கு(பெண் empowerment) பெரிதும் உதவுகிறது. 

பங்களிப்பு: 

இந்தியாவில் சுமார் 35.22 லட்சம் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கைத்தறி நெசவு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதாரம்: 

இந்தியாவின் கைத்தறி தயாரிப்புகள் உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் கைத்தறி ஏற்றுமதி ₹1,330.96 கோடியை எட்டியுள்ளது.

முக்கிய திட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள்

முன்னெடுப்புகள்: 

நுகர்வோர் மத்தியில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்க அரசு மற்றும் 'இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்' ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறது.

புவிசார் குறியீடு (GI Tag): 

இந்தியாவின் பாரம்பரிய பிராந்திய நெசவு முறைகளைப் பாதுகாக்க இதுவரை 106 கைத்தறி தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Show ad in Posts/Pages