பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை – Grand Chess Tour பட்டம் வென்ற முதல் இந்தியர்!
இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா (R. Praggnanandhaa), அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற Grand Chess Tour இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஃபேபியானோ கருவானாவை (Fabiano Caruana) வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Grand Chess Tour 2026 – முக்கிய தகவல்கள்
இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா 15–13 என்ற புள்ளிக்கணக்கில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி Grand Chess Tour பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இறுதி நாளை பிரக்ஞானந்தா, கருவானாவை விட 6 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் தொடங்கினார். இருப்பினும், அவர் இரண்டு Rapid Games போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.
அதன்பிறகு நடைபெற்ற நான்கு Blitz Games போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி முன்னிலையை தக்கவைத்துக்கொண்டு 15–13 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பரிசுத்தொகை மற்றும் அடுத்த வாய்ப்பு
Grand Chess Tour வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா 2 லட்சம் அமெரிக்க டாலர் ($200,000) முதல் பரிசுத் தொகையை பெற்றார்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள Grand Chess Tour போட்டியில் பங்கேற்பதற்கான உத்தரவாத இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்
முன்னதாக நடைபெற்ற முதல் Classical Game-ல் பிரக்ஞானந்தா, கருவானாவிடம் 6–0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இரண்டாவது Classical Game-ல் இருவரும் 3–3 என்ற கணக்கில் டிரா செய்தனர். இதன் மூலம் பிரக்ஞானந்தாவின் பட்டம் வெல்லும் நம்பிக்கை தொடர்ந்து நீடித்தது.
மூன்றாவது இடத்திற்கான போட்டி
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் வெஸ்லி சோ (Wesley So), வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) எதிர்த்து சிறப்பான வெற்றியைப் பெற்றார்.
Rapid Games இரண்டிலும் இருவரும் சமநிலை பெற்ற நிலையில், Blitz Games நான்கிலும் வெஸ்லி சோ வெற்றி பெற்று 18–12 என்ற கணக்கில் போட்டியை கைப்பற்றினார்.