BHAVYA-RASAYAN
அறிமுகம்
இந்தியாவின் இரசாயன மற்றும் பெட்ரோ இரசாயனத் துறையை உலகளவில் போட்டித்திறன் மிக்கதாக மாற்றும் நோக்கில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பாரத் ஆத்யோகிக் விகாஸ் யோஜனா – ரசாயன் (BHAVYA-RASAYAN) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் மூன்று பிரத்யேக இரசாயனப் பூங்காக்கள் (Chemical Parks) நிறுவப்பட உள்ளன.
இந்த முக்கிய அறிவிப்பு, 2026–27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BHAVYA-RASAYAN திட்டம் என்றால் என்ன?
BHAVYA-RASAYAN (Bharat Audhyogik Vikas Yojana – Rasayan) என்பது இந்தியாவின் இரசாயன உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய அளவிலான தொழில் வளர்ச்சி திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
- இந்தியாவில் உலகத் தரத்திலான இரசாயன தொழிற்பூங்காக்களை உருவாக்குதல்.
- முதலீடுகளை அதிகரித்தல்.
- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல்.
- இரசாயனப் பொருட்களின் இறக்குமதியை குறைத்தல்.
- ஏற்றுமதியை அதிகரித்தல்.
- வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.